Logo

மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் ராஜினாமா!!

மகாராஷ்டிரா - தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் முடிவடைந்த நிலையிலும், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து எந்த முடிவுகளும் இதுவரை எடுக்கப்படாத நிலையில், தற்போதைய ஆட்சிக் காலம் நாளையுடன் முடிவடைவதை தொடர்ந்து, அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் தேவேந்திர பட்னாவிஸ்.
 | 

தேர்தல் நேரத்தில் கூட்டணியாக இணைந்து போட்டியிட்ட பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகளிடையே, முதலமைச்சர் பதவியில் யார் அமர்வது என்பது குறித்த கருத்த வேறுபாடு இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், இன்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்த பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ராஜினாமா கடிதத்தையும், தனது அமைச்சகத்தின் ராஜினாமா கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளார்.

இதை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் பதவியை பிரித்துக் கொள்வது குறித்த எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை எனவும், இவ்வாறு பதிவியை பிரித்துக் கொண்டு ஆட்சி அமைப்பது இதுவரை பாஜகவின் ஆட்சியில் மேற்கொள்ளப்படாத ஓர் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இப்போது இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடின் காரணமாக, சிவசேனாவின் தலைவர்களை யாரும் தவறாக கூறவில்லை என்பதை தெளிவுபடுத்திய பட்னாவிஸ், தான் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை தொலைபேசி மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதை தொடர்ந்து, தன் மீது நம்பிக்கை வைத்து, தனக்கு மிக பெரிய பொறுப்பை அளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மகாராஷ்டிர மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த தெரிவித்துள்ளார் தேவேந்திர பட்னாவிஸ்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP