மகாராஷ்டிரா : பாஜக, அஜித் பவாருக்கு விரைவில் பாடம் கற்பிப்போம் - சிவசேனா அறைகூவல்!!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நேற்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சாராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும், ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றதை தொடர்ந்து, மாபெரும் தலைவரான சரத் பவாரை முதுகில் குத்திய அஜித் பவார் மற்றும் பாஜகவிற்கு விரைவில் பாடம் கற்ப்பிக்கப்படும் என்ற கருத்தை முன் வைத்துள்ளது சிவசேனா கட்சி.
 | 

மகாராஷ்டிராவில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கவிருந்த நிலையில், நேற்று காலை என்.சி.பி எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. இதை தொடர்ந்து, பாஜகவின் இந்த செயலால் அதிருப்தியடைந்துள்ள முக்கட்சி தலைவர்களும் பாஜக மற்றும் அஜித் பவாருக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில், மாபெரும் தலைவரான சரத் பவாரை முதுகில் குத்திய அஜித் பவாருக்கும், நியாயமற்ற முறையில் ஆட்சி அமைத்த பாஜகவிற்கும் சிவசேனா விரைவில் பாடம் கற்ப்பிக்கும் என்றும், தற்போது பெரும்பாண்மையை நிரூபிக்கும்படி கூறினாலும் நிரூபித்து ஆட்சி அமைக்கும் திறன் சிவசேனாவிற்கு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் பாஜகவின் நேற்றைய ஆட்சி அமைப்பை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருவரும் கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இருவரும், மகாராஷ்டிராவில் பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் நவம்பர் 23ஆம் தேதி கருப்பு தினம் என்று குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாருக்கு அவரது கட்சி உறுப்பினர்களின் ஆதரவும் இல்லை, அவரது தந்தை சரத் பவாரின் ஆதரவும் இல்லை என்றும் கூறியுள்ளனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP