மகாராஷ்டிரா : காங்கிரஸ் அவைத் தலைவராக பாலசாஹிப் தோரட் தேர்வு!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ் தரப்பு சபா நாயகராக அக்கட்சி தலைவர் பாலாசாஹிப் தோரட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 | 

மகாராஷ்டிரா : காங்கிரஸ் அவைத் தலைவராக பாலசாஹிப் தோரட் தேர்வு!!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான அவைத் தலைவராக காங்கிரஸ் தரப்பில் அக்கட்சி தலைவர் பாலாசாஹிப் தோரட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்ததற்கு எதிராகவும், அம்மாநில ஆளுநர் பகத் சிங்கிற்கு எதிராகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி கட்சிகளின் மஹா விகாஸ் அகாதி கூட்டணி.

இந்த வழக்கினை கடந்த 3 நாட்களாக விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்ப நடத்தப்பட வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் சபா நாயகர் யார் என்பது தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். 

இதை தொடர்ந்து, காங்கிரஸ் தரப்பின் அவைத் தலைவராக அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பாலசாஹிப் தோரட் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்ஜே தெரிவித்துள்ளார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP