மகாராஷ்டிரா : அஜித் பவார் ராஜினாமா - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லுமா பாஜக ??

மகாராஷ்டிரா மாநிலத்தில், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

மகாராஷ்டிரா : அஜித் பவார் ராஜினாமா - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லுமா பாஜக ??

மகாராஷ்டிரா மாநிலத்தில், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் அரசியல் விவகாரங்களில் திடீர் திருப்பமாக,  கடந்த சனிக்கிழமையன்று பாரதிய ஜனதா-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், என்.சி.பி தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் பதவியேற்றனர்.

இதை தொடர்ந்து, அம்மாநிலத்தில், பாஜக ஆட்சிக்கு எதிராகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கூட்டணியான மஹா விகாஸ் அகாதி அவசர மனு தாக்கல் செயதிருந்ததை தொடர்ந்து, இவ்வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், இன்று மாலைக்குள் சபா நாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இதனிடையில், ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைப்போம் என்றும் மஹா விகாஸ் அகாதி கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாஜகவுடன் இணைந்து ஆம்மாநிலத்தில் ஆட்சி அமைத்த அஜித் பவார் தற்போது தன்னுடைய துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அஜித் பவார் தற்போது பதவியை ராஜினாமா செய்திருப்பது அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, ஏற்கனவே ஆட்சி அமைத்திருக்கும் பாஜக தனது பதவியை தக்க வைத்து கொள்ளுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP