காஷ்மீர்: பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு, மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், அதை எவ்வாறு செயல் படுத்த வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
 | 

கடந்த ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீருக்கான திட்டங்கள் குறித்த விபரங்களை புதிதாக பதவியேற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஜம்மு காஷ்மீரில் பதவியேற்றுள்ளவர்களுக்கு, அவர்களது கோரிக்கையின் அடிப்படையில், காப்பீட்டுத் தொகையை 2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய பிரதமர், "ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதால், இனி இந்தியாவின் பிற மாநிலங்கள் பெறும் அனைத்து நன்மைகளையும் காஷ்மீரும் பெரும். காஷ்மீரின் நிலையை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்கள் வைத்துள்ளது. காஷ்மீரின் நிலையும், காஷ்மீர் மக்களின் நிலையும் இனி நிச்சயம் மேம்படும்" எனக் குறிப்பிட்டிருந்ததை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP