அரசியலை விட்டு நிதர்சனத்தை உணருங்கள் - பிரதமரை தாக்கிய கபில் சிபல்

அயர்லாந்து மற்றும் ஜெர்மனியின் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியா 102 இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து, அரசியல் உலகை விட்டு நிஜ உலகிற்கு வருமாரு பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார் கபில் சிபல்
 | 

அரசியலை விட்டு நிதர்சனத்தை உணருங்கள் - பிரதமரை தாக்கிய கபில் சிபல்

அயர்லாந்து மற்றும் ஜெர்மனியின் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில்  இந்தியா 102 இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து, அரசியல் உலகை விட்டு நிஜ உலகிற்கு வருமாரு பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார் கபில் சிபல். 

"அரசியல் உலகை விட்டு நிதர்சனத்திற்கு வந்தால் தான் இந்தியா தற்போது இருக்கும் நிலையை உணர முடியும். இந்தியாவின் எதிர்காலமான குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த முயற்சியுங்கள்" என  பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல்.

பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில், பெலாரஸ், பல்கேரியா, சிலி, கியூபா, துருக்கி உள்ளிட்ட 17 நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன.

மேலும், இந்தியாவின் அண்டை நாடுகளான  பாகிஸ்தான் 94வது இடமும், வங்கதேசம் 88வது இடமும், நோபாளம் 73வது இடமும் பிடித்து இந்தியாவை விட முன்னிலை வகிக்கின்றது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP