கர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர

கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியே முதன்மையானது என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
 | 

கர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியே முதன்மையானது என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் எடியூரப்பா ட்விட்டரில், ‘அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சம்மானவையே. கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியே முதன்மையானது. கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது. கன்னடமொழி, கலாசாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்தி குறித்து உள்துறை அமித்ஷா கருத்து தெரிவித்த நிலையில் கர்நாடக மாநில பாஜக முதலமைச்சர் எடியூரப்பா இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கர்நாடகவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா இந்தி என்பது ஒன்றிணைக்கும் மொழி என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP