இடைக்கால சபா நாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் பதவியேற்பு!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸின் ராஜினாமாவை தொடர்ந்து, இடைக்கால சபா நாயகராக பாஜக எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 | 

இடைக்கால சபா நாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் பதவியேற்பு!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸின் ராஜினாமாவை தொடர்ந்து, இடைக்கால சபா நாயகராக பாஜக எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் தேர்வு செய்யப்பட்டு ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்த நிகழ்வாக துணை முதலமைச்சர் அஜித் பவாரும், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸும் ராஜினாமா கடிதங்கள் சமர்ப்பித்துள்ளதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, இடைக்கால சபா நாயகராக பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் தற்போது பதவியேற்றுள்ளார். 

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும், இன்று மாலைக்குள் சபா நாயகர் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனிடையில் இன்று அம்மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, சபா நாயகராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில், இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ காளிதாஸ் கொலம்ப்கர் பதவியேற்றுள்ளார்

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP