ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி ??

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல், வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை 5 கட்டமாக நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா கட்சிக்கும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்திற்க்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
 | 

ஜார்க்கண்ட் மாநில ரகுபர்தாஸ் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 23 வரை 5 கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஜனதா தால் மற்றும் லோக் ஜான்ஷக்தி கட்சி ஆகிய மூன்றும் தனித்தனியே போட்டியிடவிருப்பதாக அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் இரண்டிற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையில், பாஜகவிடம் கூட்டணி இணைவதற்கான அழைப்பு விடுத்தும் எந்த பதிலும் வராததை தொடர்ந்து, தேர்தல் களத்தை தனியாக சந்திக்கவிருக்கும் லோக் ஜான்ஷக்தி கட்சி, மொத்தமுள்ள 81 இடங்களில், 50 இடங்களில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில், அழைப்பு விடுத்துள்ள லோக் ஜான்ஷக்தி கட்சிக்கு எந்த பதிலும் தெரிவிக்காத பாஜக, கூட்டணியான ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்துடனான கருத்து வேறுபாடுகளை சரி செய்த பின்னர் இணைந்து தேர்தல் களத்தை சந்திக்குமா என்பது குறித்த கேள்விகளுக்கு மிக விரைவில் விடை தெரியவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP