ஜம்மு- காஷ்மீர்: முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அல்கொய்தாவின் காஷ்மீர் பிரிவின் தலைவர் ஹமீத் லெல்ஹாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவின் புறநகர் பகுதிகளில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப்படையினர் நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில், நவீத் தக், ஹமீத் லெல்ஹாரி மற்றும் ஜுனைத் பட் ஆகிய 3 பயங்கரவாதிகள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. 

அல்கொய்தாவின் காஷ்மீர் பிரிவின் தலைவரான லெல்ஹாரி கொல்லப்பட்டதன் மூலம், ஜாகிர் மூசாவின் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் கடைசி தலைவரை இழந்ததாகக் கூறப்படுகிறது. முன்னாள் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியான மூசா கடந்த மே மாதம் ஜம்மு-காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP