காங்கிரஸ் நாடகம் முடியும் நேரம் இது!

பஞ்சாப் தேர்தலில் நீங்கள் வர வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று வெற்றி வாகை சூடிய அமர்ரீந்தர் சிங், மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா, ராஜஸ்தானில் சச்சின் பைலட், தமிழகத்தில் செல்வகுமார் என்று சோனியா, ராகுல், பிரியங்கா போன்றவர்கள் உதவி இல்லாமல் அரசியலில் வளர்ப்பவர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்த வேண்டிய கலாம் இது.
 | 

காங்கிரஸ் நாடகம் முடியும் நேரம் இது!

ஏழையாக வாழும் போதும், வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் வாழும் போதும், சிரமம் ஒன்றுதான். ஆனால் வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் வாழ்வது தான் கஷ்டம். அதிலும், குடும்பத்தலைவராக இருந்தால் எல்லா சுமையும் துாக்கி சுமக்க வேண்டும். அதற்கு அதீத நம்பிக்கை, பொறுமை உட்பட எல்லா அறிவும் தேவை . இது அன்றாட வாழ்க்கைக்கு மட்டும் அல்ல அரசியல்கட்சிக்கும் பொறுந்தும்.

சுந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அடித்தட்டு மக்களைப் போலவே பணக்கார்களும் இடம் பெற்றிருந்தனர். விளைவு அவர்களுக்கும் சிறை, வேதனை எல்லாம் ஒன்று தான். அப்போது வருமான வரி கட்டுபவர்களுக்கு முதல் வகுப்பு சிறை எல்லாம் கிடையாது. 

அந்த காலத்தில் வ.உ.சி போன்றவர்கள் பட்ட சிரமம், அவருடன் இருந்த தொண்டர்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. எளிதாக கூற வேண்டும் என்றால் பாரிஸ்டர் பட்டம் பெற்ற வக்கீல்கள் எல்லாம் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.

அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அதன் பலனை எல்லோரும் அனுபவித்தனர். கோடி கோடியாக சொத்துக்களை குவித்து தங்களின் குடும்பத்தை வளப்படுத்தினர். இதனால் தொண்டர்கள், தலைவர்கள் இடையே இடைவெளி ஏற்பட்டது.

தற்போது காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி காலம். சோனியா பிரதமராக முடியாது என்று தெரிந்ததும், நேரு குடும்பத்தின் பிடியில் இருந்த கட்சி விடுபட்டு இருக்க வேண்டும். நேரு குடும்பம் இன்றைய சூழ்நிலையில் காலி பெருங்காய டப்பா என்பதை உணர்ந்து மற்றவர்கள் யாரவது கட்சிக்கு தலைமை வகித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சந்தித்து வரும் தொடர் இழப்புகளை தடுத்து இருக்க வேண்டும்.

பஞ்சாப் தேர்தலில் நீங்கள் வர வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று வெற்றி வாகை சூடிய அமர்ரீந்தர் சிங், மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா, ராஜஸ்தானில் சச்சின் பைலட், தமிழகத்தில் செல்வகுமார் என்று சோனியா, ராகுல், பிரியங்கா போன்றவர்கள் உதவி இல்லாமல்  அரசியலில் வளர்ப்பவர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்த வேண்டிய கலாம் இது.

ஆனால் காலி பெருங்காய டப்பாவாக உள்ள சோனியாவின் குடும்பத்தை தொங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதால் காங்கிரஸ் அழிவுப்பாதையில் விரைந்துள்ளது.

அதன் உச்சம் தான் தேர்தல் நேரத்தில், ராகுல் தாய்லாந்துக்கு அவரசமாக பறந்தது.

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் வரும், 21ம் தேதி நடக்க உள்ளது. ராகுலுக்கு வேண்டிப்பட்டவர் என கருதப்படும் மகாராஷ்டிரா முக்கியத் தலைவர் சஞ்சை நிருபம், ஹரியானா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அசோக் தர்வர் ஆகியோர் போர்க் கொடி துாக்கி உள்ளனர்.

ராகுல் ஆதரவாளர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள் என்பதே முன்னவரின் குற்றச்சாட்டு. லோக்சபா தேர்தலுக்கு முன்பு இருந்தே இது உள்ளது. ராகுல் தலைவர் பதவியை விட்டு விட்டு ஓடுவதற்கும் கூட இது முக்கியகாரணம். இது போன்ற சூழ்நிலையில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு ராகுல் சென்று கட்சிப் பணியை வலுவூட்டி வெற்றி பெற செய்ய வேண்டும். அது தான் சிறந்த தலைவருக்கு அழகு. 

உடல் நிலை பாதிக்கப்பட்ட தால் தான் சோனியா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு ராகுல் தலைவரானார். ஆனால் இவர்களை கட்டிக் கொண்டு அழுவதற்கு அவர் தயாராக இல்லை. அதனால் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு சோனியா செல்வாரா என்பது கேள்விக்குறி. 

அவ்வாறு செல்லாவிட்டால் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி உள்ளூர் பிரமுகர்கள் தோளில் தான் விழும்.  அவர்களோ  திசைக்கு ஒருவராக திரும்பி இருக்கிறார்கள். இதனால் இந்த 2 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்பதை விட காங்கிரஸ் கை கழுவுகிறது என்பதே உண்மை.

தேச விரோத சக்திகள் வீழ்ச்சியடையும் போது வேண்டுமானால் வேடிக்கை பார்க்கலாம். ஆனால் தேசத்தை இது வரை ஒன்றுமையாக இருப்பதற்கான ஒரு கட்சி காங்கிரஸ். இது இப்போது அழிவுப்பாதையில் விரைந்து கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டியது அனைவரின் கடமை. அதை காப்பாற்ற வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு உள்ளது. அவற்றை அவர்கள்செய்யாவிட்டால் இந்த சுந்திர போராட்டத்திற்காக இன்னுயிர் நீத்தவர்கள் ஆன்மா அவர்களை சும்மாவிடாது..

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP