பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா?

பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா? என ஐதராபாத் போலீசிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 | 

பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா?

பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா? என ஐதராபாத் போலீசிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பெண்கள் என்ன செய்ய வேண்டும் ? என ஹைதராபாத் போலீசார் 14 அறிவுரைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.

அதில், 

1. வெளியில் செல்லும்போது எங்கு செல்கிறீர்கள், என்ற விவரங்களை உங்கள் வீட்டினரிடம்,நண்பரிடம் சொல்லி செல்லுங்கள்.

2. ஆட்டோ அல்லது டாக்சியில் பயணம் செய்தால் வண்டி எண், தொடர்பு எண்களை பகிருங்கள்.

3. உங்களுக்கு உதவி தேவை என்றால் 100-க்கு டயல் செய்யுங்கள். உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இது சமூக வலைதளங்களில் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பெண்களுக்கு இவ்வளவு அறிவுரைகளை சொல்லும் போலீசார், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டாம்? என ஆண்களுக்கு ஒரு அறிவுரை கூட  சொல்லவில்லை ஏன்? என பொதுமக்கள் மக்கள் மற்றும் பெண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஐதராபாத் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள்  ட்விட்டரில் தற்போது #hyderabadpolice என்னும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா?

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP