பிரதமருக்கு மரியாதை தர வேண்டியது நம் கடமை - சசி தரூர்

நமது நாட்டில் இருக்கும் வரை நமது பிரதமரை கேள்வி கேட்க நமக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அதே போல வெளிநாடுகளில் நம்மை பிரதிபலிக்கும் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் பொறுப்பும் நமக்கு உள்ளது என்று கூறியுள்ளார் சஷி தரூர்.
 | 

பிரதமருக்கு மரியாதை தர வேண்டியது நம் கடமை - சசி தரூர்

"நமது நாட்டில் இருக்கும் வரை நமது பிரதமரை கேள்வி கேட்க நமக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அதே போல வெளிநாடுகளில் நம்மை பிரதிபலிக்கும் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் பொறுப்பும் நமக்கு உள்ளது" என்று கூறியுள்ளார்  சசி தரூர்.

மோடிக்கு ஆதரவளிக்கிறார் என்று எழுந்த புதிய சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறியதாவது : "எதிர்க்கட்சி எம்பி என்ற முறையில், மோடியின் செயல்கள், தீர்மானங்கள், முடிவுகள்,கொள்கைகள் போன்றவற்றை விமர்சிக்க எனக்கு எல்லா உரிமைகளும் உள்ளது. 

நமது நாட்டில் இருக்கும் வரை நமது பிரதமரை கேள்வி கேட்க நமக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அதே போல வெளிநாடுகளில் நம்மை பிரதிபலிக்கும் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் பொறுப்பும் நமக்கு உள்ளது. நான் அவரை புகழ்ந்து பேசவில்லை, இரண்டாவது முறையாக மக்கள் அவரை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றால் அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று எனது கட்சி உறுப்பினர்களை ஆராய்ந்து செயல்பட கூறுகிறேன்" எனக் கூறினார். 

மத்திய அரசின் பலக் கொள்கைகளை குறித்து இவர் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP