சிவசேனாவின் தற்போதைய நிலைக்கு சஞ்சய் ராவுத் காரணமா ??

மகாராஷ்டிரா : பாரதிய ஜனதாவுடன் கூட்டணி, தேர்தலில் வெற்றி என்று அமைதியாக போய்கொண்டிருந்தது சிவசேனா கட்சி. அப்படியே இருந்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் கட்சிக்கு தேவையான அனைத்தும் கிடைத்து, ஆட்சியும் அமைக்கப்பட்டு மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் நிலைத்திருக்கும்.
 | 

சிவசேனாவின் தற்போதைய நிலைக்கு சஞ்சய் ராவுத் காரணமா ??

மகாராஷ்டிரா : பாரதிய ஜனதாவுடன் கூட்டணி, தேர்தலில் வெற்றி என்று அமைதியாக போய்கொண்டிருந்தது சிவசேனா கட்சி. அப்படியே இருந்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் கட்சிக்கு தேவையான அனைத்தும் கிடைத்து, ஆட்சியும் அமைக்கப்பட்டு மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் நிலைத்திருக்கும். 

ஆனால், கிடைத்த அனைத்த வாய்ப்புகளையும் விட்டுவிட்டு இப்போது எதுவமே இல்லாமல் நிற்கும் இந்த நிலை சிவசேனாவிற்கு வருவதற்கு யார் காரணமாக இருக்கும் ?? தேர்தலுக்கு முன்பு வரை கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. தேர்தலை தொடர்ந்து, சில நாட்கள் கழிந்த பிறகே விவகாரங்கள் வெடிக்க ஆரம்பித்தது.

இவை அனைத்திற்கும் காரணம் யார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பாஜகவுடனான கூட்டணியில் உறுதியாக இருந்த சிவசேனாவின் இந்த நிலைக்கு அக்கட்சி ஆலோசகர் சஞ்சய் ராவுத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சிவனேனென்று இருந்த உத்தவ்வை சொரிந்து விட்டுவிட்டார் சஞ்சய் ராவுத். பால் தாக்கரேவின் மறைவுக்கு பின்னர் தான் இவருக்கு இறக்கையே முளைத்தது. அதன் பின்னர் சிவசேனா பத்திரிகையான சாம்னாவின் பொறுப்பாளரா இவர் மாறி விட்டார்.

வாஜ்பாயின் மறைவை தொடர்ந்தே பாஜகவை சீண்டும் இவரது வேலை தொடங்கிவிட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி உயிரிழந்தார். இதை தொடர்ந்து சாம்னாவில் இது குறித்து பதிவிட்டிருந்த அவர், ஆகஸ்ட் 12, 13ஆம் தேதிகளிலேயே வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்து விட்டது. ஆனால் 16ஆம் தேதிதான் அவர் இறந்துள்ளார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தில் நரேந்திர மோடி உரையாட வேண்டும் என்பதற்காகவே வாஜ்பாய் ஒரு நாள் கழித்து உயிரிழந்திருப்பார் போலும் என்று கிண்டலாக எழுதியிருந்தார்.

இது போன்ற கருத்துக்களை ஒரு கட்சியின் ஆலோசகர் குறிப்பிடுவது சரியல்ல என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாகவும் இருந்தது. இதை தொடர்ந்து, சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக-சிவசேனா கூட்டணி கருத்து வேறுபாடுகளினால் ஆட்சி அமைக்க முடியாமல் பிரிந்து விட்டது. இதனிடையில், கூட்டணி பிரிவிற்கு காரணம் பாஜக தான் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் சஞ்சய் ராவுத்.

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியை 2.5ஆண்டுகளாக பிரித்து கொள்ளலாம் என்று சிவசேனா கூறியது. அதற்கு மறுப்பு தெரிவித்தது பாஜக. இதனால் அதிருப்தியடைந்த சிவசேனா தேர்தலுக்கு முன்னர் இத்தகைய கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்த பாஜக, தேர்தலை தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவிப்பதாக குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து, பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார் சஞ்சய் ராவுத். 

இதனிடையில், சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தூண்டிய இவர், சிவசேனாவின் மொத்த மரியாதையையும் தற்போது கீழிறக்கி விட்டார்.

இவரது பேச்சை கேட்காமல் இருந்திருந்தால் சிவசேனாவிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சொந்தமாக யோசித்து முடிவெடுத்திருந்தால் உத்தவ் பாஜகவுடன் இணைந்தே ஆட்சி அமைத்திருப்பார். அவருக்கு தேவையான அனைத்தையும் வழங்கி பாஜகவும் அவர்களை தன்னுடனே வைத்திருந்திருக்கும். இவரின் பேச்சை கேட்டு, கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் இழந்ததோடில்லாமல், தனது கொள்கைகளையும் விற்றுவிட்டு எதுவுமே இல்லாமல் நிற்கிறார் உத்தவ் தாக்கரே. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP