சிதம்பரம் உதவியாளரிடம் விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் கே.வி.பெருமாளிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
 | 

சிதம்பரம் உதவியாளரிடம் விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் கே.வி.பெருமாளிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள வீட்டில் பெருமாளிடம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் கே.வி.பெருமாள். நிதியமைச்சகத்தில் பணியாற்றியபோது கார்த்திசிதம்பரத்துடன் பெருமாள் தொடர்பில் இருந்தாரா என்றும், சிதம்பரத்தை சந்திக்க இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு ஏற்பாடு செய்து தந்தாரா எனவும் விசாரணை நடைபெற்றுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் திஹார் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP