வேற்றுமையிலும் ஒற்றுமையே இந்தியர்களின் அடையாளம் - மோகன் பகவத்

எல்லா மதத்தவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நாடு இந்தியா எனவும் இத்தனை வேற்றுமைகளிலும் ஒற்றுமை காண்பதே இந்தியர்களின் அடையாளம் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் மோகன் பகவத்.
 | 

"உலகளவில் இந்தியாவில் மட்டும் தான் முஸ்லீம்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கின்றனர். யூதர்களுக்கு இடமளித்திருக்கும் ஒரே நாடு நமது இந்தியா. முஸ்லீம்கள், யுதர்கள், பார்ஸிகள் என அனைத்து இன மக்களின் வசிப்பிடமாக இந்தியா இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதே நமது வெற்றி. உலகளவில் எங்கும் இத்தைகைய ஒற்றுமையான மக்களை பார்க்க முடியாது. வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியர்களின் அடையாளம்" என்று ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் முக்கிய தலைவர்களுடனான உரையாடலின் போது மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்துக்களின் வளர்ச்சி மட்டுமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் இல்லை எனவும், இந்தியாவிலிருக்கும் அனைத்து இன மக்களின் நலனுக்காகவும் இந்த அமைப்பு உழைத்துக்கொண்டிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP