பாகிஸ்தானிற்கு தண்ணீர் தர இந்தியா தயாராக இல்லை - பிரதமர் மோடி அதிரடி!!!

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்களை சந்தித்த பிரதமர் மோடி, பாகிஸ்தானிற்கு இனி தண்ணீர் விட போவதில்லையென்றும், மக்களின் நலனுக்காக பாடுபட தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
 | 

ஹரியானா மாநிலம், சார்க்கி தாத்ரி நகரில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, "70 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தானுடன் பகிர்ந்து வந்தோம். ஆனால், இனியும் பாகிஸ்தானின் அட்டூழியங்களை பொறுத்து போக தயாராக இல்லை. எனவே இந்திய மக்களுக்கு சொந்தமான நீரை இந்தியர்கள் மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கான கடைசி நாளாக அக்டோபர் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, வரும் அக்டோபர் 18 அன்று, ஹரியானா மாநிலத்தில், ஜாட் இன மக்கள் அதிகம் காணப்படும் இரு இடங்களில்,  தேர்தலுக்கான இறுதி நாள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் பிரதமர் மோடி. 

தற்போது நடக்கவுள்ள தேர்தலுக்கான முடிவுகள், வரும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP