ஹிந்தி கட்டாயம் என நான் ஒருபோதும் பேசவில்லை: அமித் ஷா விளக்கம்

ஹிந்தி மொழி குறித்து தான் பேசிய கருத்துக்களை எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திரித்து, அதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
 | 

இது குறித்து அமித் ஷா கூறியதாவது: ஹிந்தி மொழி கட்டாயம் என்றோ, அனைவரும் கற்றே ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் பேசவில்லை. அனைவருக்கும் அவரவரது தாய் மொழி மிக முக்கியம். அதை அனைவரும் கற்க வேண்டும். இரண்டாவது மொழியாக ஹிந்தியை கற்றால் அது அனைவருக்கும் இணைப்பு மொழியாக இருக்கும் என்றே கருத்து கூறினேன்.
என் கருத்தை எதிர்க்கட்சியினர் திரித்து பேசுகின்றனர். இதை வைத்து அவர்கள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.அதுதான் அவர்களின் விருப்பம்" என அவர் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP