பாட்டியை நினைத்துப் பெருமைப் படுகிறேன்: இந்திரா குறித்து ராகுல் ட்வீட்

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று அவரை நினைத்து பெருமை படுவதாகவும் அவரது பேரனும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 | 

பாட்டியை நினைத்துப் பெருமைப் படுகிறேன்: இந்திரா குறித்து ராகுல் ட்வீட்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று அவரை நினைத்து பெருமைபடுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

இதனையடுத்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திரா காந்தி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "இன்று பாட்டியை நினைவுகூர்கிறேன். அவர் எனக்கு நிறையவே கற்று கொடுத்திருக்கிறார். அவர் மக்களுக்காக நிறையவே தன்னை அர்ப்பணித்துள்ளார். நான் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP