மகிழ்ச்சி.. என்று முதலில் சொன்னது ரஜினியா? காமராஜரா?

"கருப்பு காந்தி" என்று மக்களால் அழைக்கப்பட்ட காமராஜருக்கும், காலா, கபாலி போன்ற திரைப்படங்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்குனு யோசிக்கறீங்களா? சம்மதம் இருக்கே. கபாலி படத்தில் ரஜினி சொல்லும் 'மகிழ்ச்சி' என்ற டயலாக் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ். தமிழ் பேசினால் அசிங்கம் என்று நினைக்கும் பல இளைஞர்கள் கூட 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இந்த வார்த்தையை பல ஆண்டுகளுக்கு முன்பே உபயோகப்படுத்தியவர் காமராஜர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
 | 

மகிழ்ச்சி.. என்று முதலில் சொன்னது ரஜினியா? காமராஜரா?

"கருப்பு காந்தி"  என்று மக்களால் அழைக்கப்பட்ட காமராஜருக்கும், காலா, கபாலி போன்ற  திரைப்படங்களுக்கும்  என்ன சம்மந்தம் இருக்குனு யோசிக்கறீங்களா? சம்மதம் இருக்கே. கபாலி படத்தில் ரஜினி சொல்லும் 'மகிழ்ச்சி' என்ற டயலாக் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ். தமிழ் பேசினால் அசிங்கம் என்று நினைக்கும் பல இளைஞர்கள் கூட 'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இந்த வார்த்தையை பல ஆண்டுகளுக்கு முன்பே உபயோகப்படுத்தியவர் காமராஜர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அது மட்டுமா!!  'காலா'னா கருப்பு, வட இந்திய மக்கள் காமராஜரை 'காலா காந்தி' என்று தான் அழைத்தார்களாம். இந்த படிக்காத மேதை காமராஜரை பற்றிய இன்னும் பல சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

* காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
* கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
* காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
*  காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.
* காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும்.
*  தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
* பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்'' வெட்டுவார்.
*  தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.
* காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.
*  காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
* வட இந்திய மக்கள் காமராஜரை 'காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். 'காலா காந்தி' என்றால் 'கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
* அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி அனுப்பி விடுவார்.
* பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.
* காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
*  காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP