ஜிஎஸ்டி வரி குறைப்பு: சுற்றுலா பயணிகள்,ஓட்டல் அதிபர்கள் மகிழ்ச்சி!

ஓர் இரவு தங்க 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், 1001 - 7,500 வரை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, இதுவரை வசூலிக்கப்பட்ட, 18 சதவீத வரி, 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 | 

ஜிஎஸ்டி வரி குறைப்பு: சுற்றுலா பயணிகள்,ஓட்டல் அதிபர்கள் மகிழ்ச்சி!

கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி குழு கூட்டத்தில், சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஓட்டல் அறை கட்டங்களுக்கு  விதிக்கப்படும் வரியை குறைத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

அதன்படி, ஓர் இரவு தங்க 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், 1001 - 7,500 வரை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, இதுவரை வசூலிக்கப்பட்ட, 18 சதவீத வரி, 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

7,500க்கு மேல் வசூலிக்கும் ஓட்டல்களுக்கு, 28லிருந்து 18 சதவீதமாக வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மற்றும், ஓட்டல் அதிபர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP