ஆட்சியமைக்க பட்னாவிஸ்-ஐ அழைக்கும் ஆளுநர்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலை தொடர்ந்தும் தற்போது வரை ஆட்சி அமைக்க இயலாத நிலை தொடர்ந்து வரும் நிலையில், நேற்று அம்மாநிலத்தின் முந்தைய ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தற்போது பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸிற்கு ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி.
 | 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி கட்சியிடையே முதல்வர் பதிவியில் அமர்ந்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கருத்த வேறுபாடு இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், நேற்று அம்மாநில ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். 

இதனிடையில், ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடலில் பங்கு கொள்ள வருமாறு சிவசேனாவிற்கு பாஜக பலமுறை அழைப்பு விடுத்தும், தனது நிலையிலிருந்து சற்றும் மாறாத சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவின் அழைப்பை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், அம்மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரி, பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்-ஐ ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சி அமைப்பதில் வெற்றி கூட்டணியிடையே பலத்த கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையிலும், பட்னாவிஸிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP