பிரதமருக்கு நிவாரணமாக 9 பைசா செக் அனுப்பிய இளைஞர்! ஏன் தெரியுமா?

பிரதமர் நரேந்திரமோடிக்கு நிவாரணத் தொகையாக 9 பைசா செக் அனுப்பி இளைஞர் ஒருவர் நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
 | 

பிரதமருக்கு நிவாரணமாக 9 பைசா செக் அனுப்பிய இளைஞர்! ஏன் தெரியுமா?

பிரதமர் நரேந்திரமோடிக்கு நிவாரணத் தொகையாக 9 பைசா செக் அனுப்பி இளைஞர் ஒருவர் நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் இருந்து கர்நாடக தேர்தலுக்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்த எண்ணெய் நிறுவனங்கள் மே 13ஆம் தேதி வரை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்தது. இதையடுத்து பெட்ரோல் விலை ஏற தொடங்கியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பைசா கணக்கில் விலையை குறைத்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தெலுங்கானாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமருக்கு 9 பைசா செக் அனுப்பி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

தெலுங்கானாவின் ராஜாண்ணா சிர்சிலாவை சேர்ந்த இளைஞரான சாந்து என்பவர், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வந்த மாவட்ட ஆட்சியரிடம்  9 பைசாக்கு செக் ஒன்றை கொடுத்தார். இந்த ஒன்பது பைசாக்கள் பிரதமரின் நிவாரண நிதியில் சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP