காதலி மீது சந்தேகம், விபரீத முடிவெடுத்த தமிழக இளைஞர் மும்பையில் கைது !

விஜயகுமாரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு சந்தியா சம்மதித்தாலும் சந்தியா மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் ஓட்டலுக்கு அழைத்து சென்று கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் விஜயகுமார்.
 | 

காதலி மீது சந்தேகம், விபரீத முடிவெடுத்த தமிழக இளைஞர் மும்பையில் கைது !

தமிழகத்தை சேர்ந்த சந்தியா (22)  மும்பை ரேரோடு தாருகானா பகுதியில் வசித்து வந்துள்ளார். அதேபோல தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் என்கிற இளைஞரும் மும்பையில் வசித்து வருகிறார். இருவரும் பல வருடங்களாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்துள்ளனர்.

இந்நிலையில் திங்களன்று  இருவரும்  சாந்தாகுருஸ், கோலிபர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.  பின்னர் நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியில் வராததால் சந்தேகப்பட்ட ஓட்டல் ஊழியர்கள்  அறை  கதவை நீண்ட நேரம் தட்டியும் அறைக்குள் இருந்து எந்த சத்தமும் இல்லாததால் மாற்று சாவியை கொண்டு திறந்துள்ளார். 

 அறைக்குள்  மயங்கிய நிலையில் கிடந்த சந்தியாவை மீட்ட ஊழியர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயகுமாரை தேடி வந்த நிலையில் சிவ்ரி பகுதியில் விஜயகுமார் லாரி முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்ததுள்ளது.

பின்னர் விஜயகுமாரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு சந்தியா சம்மதித்தாலும் சந்தியா  மீது தனக்கு  சந்தேகம் ஏற்பட்டதால் ஓட்டலுக்கு அழைத்து சென்று கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் விஜயகுமார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP