பெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி!

லக்னோவில் குழந்தையை கடத்தி செல்லும் நபர் என்ற சந்தேகத்தில், பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய புர்கா உடையணிந்து வந்த இளைஞனை போலீசார் மீட்டனர்.
 | 

பெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி!

லக்னோவில் குழந்தையை கடத்தி செல்லும் நபர் என்ற சந்தேகத்தில், பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய புர்கா உடையணிந்து வந்த இளைஞனை போலீசார் மீட்டனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விகாஸ் நகர் பகுதியில், ஒரு இளைஞர் புர்கா உடையணிந்து சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் குழந்தை கடத்தல் காரர் என்ற சந்தேகத்தில் அவரை சரமாரியாக தாக்கினர். அப்போது, அவ்வழியாக சென்ற ஒரு சப்-இன்ஸ்பெக்டர் அவர்களை தடுத்து நிறுத்தி அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 

இது குறித்து விகாஸ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தீரஜ் குமார் சுக்லா கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களால் தாக்கப்பட்ட அந்த இளைஞர் ஷெனாய் விருந்தினர் மாளிகை அருகே சுற்றிக்கொண்டிருந்தார். அவரது காலணிகளையும் அவர் நடந்து செல்லும் நடவடிக்கையையும் கண்டு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்தி நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த இளைஞர் சில மீட்டர் தூரம் ஓட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை கடுமையாக தாக்கினர். அப்போது அவ்வழியாக சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அவரை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தார். 

அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர்  முதலாமாண்டு பொறியில் படித்து வரும் மாணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது அடையாளங்களை சோதனை செய்து பல்கலைக்கழகத்தில் அவரை குறித்து விசாரித்தோம். அவரது அடையாளத்தை உறுதி செய்த பின்னர், மாணவரிடம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் சந்தேகத்தை உருவாக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்தை அவரை அனுப்பினோம்" 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP