யோகி ஆதித்யநாத், ஸ்மிரிதி இரானிக்கு கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு!

உத்தப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி ஆகியோர் கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 | 

யோகி ஆதித்யநாத்,  ஸ்மிரிதி இரானிக்கு கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு!

உத்தப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி ஆகியோர் கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 6 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், 7ம் கட்ட தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதில், மேற்கு வங்க மாநிலத்திலும் அன்றைய தினம் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 

இதையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், பாஜக தலைவர்கள் மேற்குவங்கம் வருவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது. தொடர்ந்து மே 15ம் தேதி உத்தப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதேபோன்று மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில், இவர்களது இருவரும் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். 

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "நாட்டின் முக்கிய தலைவர்கள், பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டால், இந்த தேர்தலின் அர்த்தம் என்ன? தலைமை தேர்தல் ஆணையம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP