கோட்ஸே குறித்து பேசிய பாஜக எம்.பிக்களுக்கு எடியூரப்பா கடும் கண்டனம்!

கோட்சே குறித்து மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மற்றும் பாஜக எம்.பி நளின் குமார் கட்டீல் ஆகியோரின் கருத்துக்கு கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 | 

கோட்ஸே குறித்து பேசிய பாஜக எம்.பிக்களுக்கு எடியூரப்பா கடும் கண்டனம்!

கோட்சே குறித்து மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மற்றும் பாஜக எம்.பி நளின் குமார் கட்டீல் ஆகியோரின் கருத்துக்கு கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோட்சே குறித்து பேசியதற்கு, இந்திய அளவில் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய போபால் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங், 'கோட்சே ஒரு தேசபக்தர்' என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் அனந்தகுமார் மற்றும் பா.ஜ.க எம்.பி நவீன் குமார் கட்டீல் ஆகிய இருவரும் பிரக்யாவின் கருத்தை ஆதரித்து பதிவிட்டுருந்தனர்.

இதுதொடர்பாக இன்று பாஜக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசும்போது, "கர்நாடக பாஜக எம்.பிக்களின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. முன்னதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பிரக்யா சிங், அனந்தகுமார் ஹெக்டே, நளின் குமார் கட்டீல் ஆகிய மூவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

10 நாட்களுக்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் கோட்சே குறித்து பேசியதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அமித் ஷா கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுப்பார்.

நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர் மகாத்மா காந்தி. அவருக்கு எதிராக பாஜக எம்.பிக்கள் பேசியது வருத்தத்திற்குரியது. ஒரு விஷயத்தை நாம் பேசுவதற்கு முன்பு, அது குறித்த அறிவு நமக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் பேசக்கூடாது, நாட்டின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் காந்தியை பேசுவதற்கு முன் அவர்கள் யோசித்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP