ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா?

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் அதிக எம்எல்ஏ.,க்களை கொண்டுள்ள கட்சி என்ற முறையில் பாஜக ஆட்சியமைக்க, அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து உரிமை கோருவார் எனத் தெரிகிறது.
 | 

ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பா?

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் இன்றிரவு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததையடுத்து, அவரது தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து, தமது முதல்வர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்யும் பொருட்டு, மாநில ஆளுநரை சந்திக்க குமாரசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, மாநில சட்டப்பேரவையில் அதிக எம்எல்ஏ.,க்களை கொண்டுள்ள கட்சி  என்ற முறையில் பாஜக  ஆட்சியமைக்க, அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து உரிமை கோருவார் எனவும் தெரிகிறது. பாஜக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கு பிறகு எடியூரப்பா ஆளுநரை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP