உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்கின்றன - பக்ரைனில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று பக்ரைன் நாட்டிற்குச் சென்ற அவருக்கு இளவரசர் கலீபா பின் சல்மான் சிறப்பான வரவேற்பு அளித்தார். தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 | 

தொடர்ந்து, அங்குள்ள இந்திய வம்சா வழியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவில் உள்ள உங்களது குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் பேசும்போது, ​​அவர்கள் சூழலில் ஒரு மாற்றத்தை உணர்கிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணருகிறீர்களா? இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறதா இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், "அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தின் அளவை இரண்டு மடங்காக அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது தான் நமது இலக்கு. 

செப்டம்பர் 7 ஆம் தேதி இந்தியாவின் 'சந்திரயான்' நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கப் போகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்து உலகம் முழுவதும் இன்று விவாதம் நடந்து வருகிறது. நம்முடைய திறமைகளை மட்டுமே பயன்படுத்தி, இவ்வளவு சிறிய பட்ஜெட்டில் நாம் எவ்வாறு இதனை செய்தோம் என்று உலகம் இந்தியாவை பார்த்து வியப்படைகிறது" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP