மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள்: மோடி மீது ராகுல் தாக்கு!

மேகாலயா சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து இரண்டு வாரங்களாக 15 சுரங்கப் பணியாளர்கள் அதில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காப்பாற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

கடந்த 13-ஆம் தேதி மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலைகளில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தில் பணியாற்றி வந்த 15 ஊழியர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். அவர்களை காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர.

370 அடி ஆழம் கொண்ட அந்த சுரங்கத்திற்குள் தொடர்ந்து தண்ணீர் உள்ளே புகுந்து வருவதால், மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளன. சோனார் தொழில்நுட்பம், நீருக்கு அடியில் கேமரா உள்ளிட்டவை மூலம் பணியாளர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க மீட்புப்படையினர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அதுவும் தாமதமாகி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "15 சுரங்க தொழிலாளர்கள் சுவாசிக்க காற்று கூட இல்லாமல் சுரங்கத்துக்குள் சிக்கி 2 வாரங்களாக தவித்து வருகின்றனர். ஆனால், பிரதமரோ பாலம் கட்டி, விழாவில் கேமராவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்" என எழுதினார். மேலும். "மீட்புக்காக உயர் அழுத்த பம்பு ஏற்பாடு செய்ய அரசு மறுத்து வருவகிறது. உடனடியாக சுரங்கப் பணியாளர்கள் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ராகுல்காந்தி.

இந்தக் துயரமான சம்பவத்தை வைத்து ராகுல்காந்தி அரசியல் செய்வதாகவும் பாதுகாப்பில்லாத சுரங்கப் பணிகளுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை காரணம் என்றும் மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP