'பெண்கள் சுவர்' போராட்டம் நல்லதல்ல: காங்கிரஸ்

சபரிமலை விவகாரத்தில், கேரள ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்டின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ள 'பெண்கள் சுவர்' போராட்டம், மேலும் பிரிவினையை உருவாக்கும் என காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.
 | 

'பெண்கள் சுவர்' போராட்டம் நல்லதல்ல: காங்கிரஸ்

சபரிமலை விவகாரத்தில், கேரள ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்டின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ள 'பெண்கள் சுவர்' போராட்டம், மேலும் பிரிவினையை உருவாக்கும் என காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. 

சபரிமலைக்குள் அனைத்து பெண்களும் நுழைய அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன. பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போர்க்கொடி பிடித்தனர். சபரிமலைக்குள் பெண்களை நுழைய விடாமல் போராட்டக்காரங்கள் தடுத்ததும், போலீசார் தடியடி நடத்தியதும் பெரும் சர்ச்சையை கிளப்பின. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் கட்சி, சபரிமலை சம்பிரதாயங்களை உடைப்பதாக வலதுசாரி கட்சிகளும், அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்நிலையில், கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கோர, முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். 190 அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 170 அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, வரும் ஜனவரி 1ம் தேதி, மாபெரும் பெண்கள் போராட்டம் நடத்த இருப்பதாக விஜயன் தெரிவித்தார். கசர்கோடு பகுதியில் இருந்து திருவனந்தபுரம் வரை, 10 லட்சம் பெண்கள் ஒன்றாக நின்று, சபரிமலையில் அனைத்து பெண்களும் நுழைய ஆதரவு தெரிவிக்க உள்ளனர் என அவர் தெரிவித்தார். 

இந்த போராட்டம் மேலும் பிரிவினையை உண்டாக்கும் என காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. "இந்த பெண்கள் சுவர் போராட்டம் மேலும், சமூகங்கள் மத்தியில் சாதி என்ற பெயரில் பிரிவினையை உண்டாக்கும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், பல்வேறு இந்து அமைப்புகளுடன் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் கேரள தலைமை செயலாளரும் இருந்துள்ளார். இது அரசு நடத்தும் போராட்டம் அல்ல என முதல்வர் தெளிப்படுத்த வேண்டும்" என கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP