மறுசீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டம் நிறுத்தப்படுமா?: தேவசம் போர்டு

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தால், போராட்டத்தை கைவிட இந்து அமைப்புகள் தயாரா என கேரள தேவசம் போர்டு கேள்வி எழுப்பியுள்ளது.
 | 

மறுசீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டம் நிறுத்தப்படுமா?: தேவசம் போர்டு

சபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தால், போராட்டத்தை கைவிட இந்து அமைப்புகள் தயாரா, என கேரள தேவசம் போர்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர் போராட்டங்களுக்கு இடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் வாகனங்களில் பெண்கள் உள்ளனரா என போராட்டக்காரர்கள் சோதனை செய்து வந்தனர். பெண்களை கோவிலுக்குள் செல்ல வேண்டாமென போராட்டக்காரர்கள் கெஞ்சும் காட்சிகளும் அரங்கேறின. கோவிலுக்கு செலவர்களுக்கு பாதுகாப்பளிக்க, போலீசார் தடியடி நடத்தினர். மேலும், பல ஊர்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நிலையை கட்டுக்குள் கொண்டு வர, கேரள அரசு முயற்சி செய்து வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்தால், போராட்டத்தை கைவிட தயாரா என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தேவசம் போர்டு முடிவு எடுக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP