கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா?

காங்கிரஸ் கட்சியினர் விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலக தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 | 

கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா?

காங்கிரஸ் கட்சியினர் விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலக தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக இருகட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் கூட்டணி கட்சி மோதல் குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியானது. அதனை உறுதிபடுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோமசேகர், கடந்த 5 ஆண்டு காலம் சித்தராமையா நன்றாக ஆட்சி நடத்தினார். 

மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் திட்டமிட்டப்படி நடந்தன. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. எங்களை மதிப்பதும் இல்லை என சித்தராமையா ஆட்சியை புகழ்தார். இதே போல அமைச்சர் நாகராஜ் கூட்டணி ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என பகிரங்கமாக தெரிவித்தார்.

இவர்களின் அடுத்தடுத்த பேட்டியை பார்த்து அதிருப்தி அடைந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் விரும்பினால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP