தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் கொலை ஏன்? - நக்ஸல்கள் விளக்கம்

நக்ஸல்களின் விளக்கத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட அச்சுதானந்த சாஹுவின் உடலில் பல தோட்டாக்கள் பாய்ந்திருப்பதும், மண்டையோடு சிதைந்திருப்பதும், அது கொலை என்பதை உணர்த்துகிறது என்கிறார் காவல்துறை அதிகாரி.
 | 

தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் கொலை ஏன்? - நக்ஸல்கள் விளக்கம்

ஊடகங்களை தாக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், மோதலின்போது எதிர்பாராத விதமாகவே தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹு பலியானதாகவும் நக்ஸல்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நக்ஸல்களின் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியில் 20 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்பட்டாமல் உள்ள கிராமம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன் சென்ற தூர்தர்ஷன் செய்திக் குழுவினர் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த சாஹு உயிரிழந்தார்.

பெரிய அளவிலான அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, நக்ஸல்கள் தங்களுடைய விளக்க அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அதில், ஊடகங்களை தாக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், காவல்துறையுடன் நடைபெற்ற மோதலின்போது எதிர்பாராத விதமாக அச்சுதானந்த சாஹு பலியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அது திட்டமிட்ட படுகொலை என்று தண்டேவாடா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் தெரிவித்துள்ளார். ‘’கேமரா ஏன் திருடப்பட்டது? ஏனென்றால் ஊடகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட முதல் சில நிமிடங்களின் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. அச்சுதானந்த சாஹுவின் உடலில் பல தோட்டாக்கள் பாய்ந்திருப்பதும், அவரது மண்டை ஓடு சிதைந்திருப்பதும், இந்தக் கொலை தற்செயலாக நடக்கவில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது’’ என்றார் அவர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP