தாய், தந்தை பற்றி காங்கிரஸ் ஏன் விமர்சிக்கிறது - மோடி

யாருடைய குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. பதவிக்கான செயல்பாடுகள் குறித்தே விமர்சிக்கிறேன். ஆனால் எனது தாய், தந்தை பற்றி காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 | 

தாய், தந்தை பற்றி காங்கிரஸ் ஏன் விமர்சிக்கிறது - மோடி

யாருடைய குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை., ஒருவர் வகிக்கும் பதவிக்கான செயல்பாடுகள் குறித்தே விமர்சிக்கிறேன். ஆனால் எனது தாய், தந்தை பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி குடும்பத்தின் 5 தலைமுறை குறித்து அனைவருக்கும் தெரியும், ஆனால் பிரதமர் மோடியின் தந்தை யார் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. மேலும் பிரமதாவதற்கு முன்பாக மோடியை எத்தனை பேருக்கு தெரியும்?என காங்கிரஸ் மூத்த தலைவர் விலாஸ்ராவ் முட்டேம்வர் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய பிரதேசத்தில் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  “அரசியல் பிரச்சினைகளில் தனது தாய், தந்தையை இழுப்பதை மக்கள் ஒருபோதும் ரசிக்க மாட்டார்கள். யாருடைய குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் நான் விமர்சிப்பதில்லை.வ்ஒருவர் வகிக்கும் பதவிக்கான செயல்பாடுகள் குறித்தே விமர்சிக்கிறேன். எனது தாய், தந்தை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறது காங்கிரஸ் கட்சி” எனக் கூறினார்.  
 

Newstm. in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP