நான் ஏன் அறையப் போகிறேன்? - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா விளக்கம்!

பிரதமர் மோடியை அறைவேன் என்று தான் கூறவில்லை; தான் அப்படிப்பட்டவர் இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 | 

நான் ஏன் அறையப் போகிறேன்? - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா விளக்கம்!

பிரதமர் மோடியை அறைவேன் என்று தான் கூறவில்லை; தான் அப்படிப்பட்டவர் இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி நேற்று மேற்கு வங்க மாநில பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய போது, "மம்தா அவர்கள் என்னை அடிப்பேன் என்று கூறுகிறார். சகோதரி(திதி) என்று கருதி, உங்களது அடிகளை எனது ஆசீர்வாதமாக கருதி ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறினார். 

இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் மம்தா, புருலியாவில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியபோது, "பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை. நான் அப்படிப்பட்டவர் இல்லை. நான் ஏன் மோடியை அறைய போகிறேன்?

ஜனநாயக விரோதம்/ஜனநாயக அறை (slap of democracy) என்பதை பற்றியே நான் பேசினேன். மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்து மோடியை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்ற அர்த்தத்தில் கூறினேன்" என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP