யார் இந்த விங் கமாண்டர் அபிநந்தன்?

இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த விமானி அபிநந்தன் ஆவார். இவர் MiG - 21 Bison என்ற விமானத்தின் விமானியாக இருக்கிறார். வருகிற 2019 இறுதியில் இந்த விமானத்திற்கு ஓய்வு அளிப்பதாக இருந்தது.
 | 

யார் இந்த விங் கமாண்டர் அபிநந்தன்?

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 12 போர் விமானங்கள், 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. இதில், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா தகவல் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, இன்று பாகிஸ்தான் போர் விமானங்கள், காஷ்மீர் எல்லையில் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் விமானங்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு இந்திய போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றன. இன்று காலை எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப் -16 விமானத்தை இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்ற நிலை உருவாகியுள்ளது. 

யார் இந்த விங் கமாண்டர் அபிநந்தன்?

இதைத்தொடர்ந்து, மிக்-21 போர் விமானம் மற்றும் அதன் விமானி ஒருவரை காணவில்லை என இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தகவல் தெரிவித்தார். 

தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் (Wing Commander) அபிநந்தன் என்பவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய விமானியை பிடித்து வைத்துள்ளது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

யார் இந்த விங் கமாண்டர் அபிநந்தன்?

யார் இந்த விங் கமாண்டர் அபிநந்தன்? 

யார் இந்த விங் கமாண்டர் அபிநந்தன்?

இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த, அனுபவம் வாய்ந்தவர் விங் கமாண்டர் அபிநந்தன் ஆவார். இவர் தற்போது MiG - 21 Bison என்ற விமானத்தின் விமானியாக இருக்கிறார். வருகிற 2019ம் ஆண்டு இறுதியில் இந்த விமானத்திற்கு ஓய்வு அளிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவரது குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. இவரது தந்தை 'வர்தமான்' ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி(ஏர் மார்ஷல்) ஆவார். சென்னை கிழக்கு தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் உள்ள விமானப்படை ஊழியர்கள் குடியிருப்பில் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர் சென்னை தாம்பரத்தில் பணியாற்றியுள்ளார். கோவை விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்றுள்ளார். தனது 26 வயதிலே அவர் விமானப்படையில் இணைந்துள்ளார். ஜூன் 19,2004 அன்று விமானப்படையில் இணைந்தார். 

இன்று காஷ்மீர் எல்லைக்குள் புகுந்த எப்-16 என்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீழ்த்தியது இவரது மிக்-21 விமானம் தான். இந்த தாக்குதலின் போது எதிர்பாராத விதமாக அவரது மிக் விமானம் எல்லைக்கோட்டை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் அவரை பிடித்து வைத்துள்ளது. விமானி அபிநந்தனை அந்நாட்டு ராணுவத்தினர் அடித்துள்ளனர். இதில் அவரது ஒரு கண் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விமானி அபிநந்தனை அடித்து இழுத்துச் செல்வது போன்ற வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்திய மக்களிடையே இந்த வீடியோக்கள் மிகவும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் #BringBackAbhinandan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP