இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எங்கே? ப.சிதம்பரம் கேள்வி

இந்திய பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு கொண்டு செல்வோம் என்ற வாக்குறுதியை பாஜக இதுநாள் வரை நிறைவேற்றவே இல்லை என மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
 | 

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எங்கே? ப.சிதம்பரம் கேள்வி

இந்திய பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்கு கொண்டு செல்வோம் என்ற வாக்குறுதியை பாஜக இதுநாள் வரை நிறைவேற்றவில்லை என மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.

2018-19 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஜூலை -செப்டம்பர்) நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.1  சதவீதமாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது 1.1 சதவீதம் குறைவு என்று நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் இன்று (சனிக்கிழமை) கூறியது:

மத்தியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் பொருளாதாரத்தை இரட்டை இலக்கத்துக்கு இட்டு செல்வோம் என்று பாஜகவினர் கூறி வந்தனர். இந்த வாக்குறுதியை அவர்கள் கடந்த நான்காண்டுகளாக நிறைவேற்றவே இல்லை. மீதமுள்ள ஓராண்டிலும் நிறைவேற்ற போவதில்லை.

நாட்டில் தொழில் துறை, வங்கி்த் துறை, கட்டுமான துறை என எல்லா துறைகளும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல நிறுவனங்கள் தற்போது திவாலாகி வருகின்றன. வங்கிகளின் வராக்கடன் அதிகரித்து கொண்டே போகிறது. பின்னர் எப்படி பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP