காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு எப்போது?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னரே காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக காரிய கமிட்டி கூடி முடிவெடுக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அவரையே தொடர்ந்து தலைவர் பதவியில் நீட்டிக்க வைக்க கட்சியின் மூத்த தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஆனால் ராகுல் காந்தி, ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெற மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

இதையடுத்து, நீண்ட நாட்களாக தலைவர் இல்லாதா சூழ்நிலையில். காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. ஆனால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னரே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP