பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியபோது பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார்?

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தப்போவது குறித்து யாரெல்லாம் அறிந்திருந்தார்கள், குறிப்பாக பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி சாதாரண குடிமக்களின் மனதில் எழுந்திருக்கும். அதற்கு விடையளிக்கிறது இச்செய்தி.
 | 

பாகிஸ்தானில் உள்ள பாலாகோட், முசாஃபராபாத், சகோதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 12 விமானங்கள் அதில் ஈடுபட்டிருந்தன. 1,000 கிலோ வெடிகுண்டுகளை வீசியதன் மூலமாக, ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாத முகாம் அழிக்கப்பட்ட்டதாகவும், 300 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்தது. 

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியபோது பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார்?

இந்தத் தாக்குதல் பிரதமருக்கு தெரிந்து நடந்ததா அல்லது தெரியாமல் நடந்ததா?, அந்த சமயத்தில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்றெல்லாம் சில கேள்விகள் எழுந்தன. முன்னதாக, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியிருந்தது. அந்த வகையில், பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது என்பது முன்பே திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும்.

இந்த அதிரடி நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், அவரது ஒப்புதலின் பேரிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது. இதையொட்டி, மத்திய அமைச்சர்கள் அனைவரும், அவர்களுக்கான நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லியில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், தாக்குதல் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக தகவல் இல்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சீனப் பயணம் தாமதிக்கப்பட்டது. தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு-காஷ்மீரில் வன்முறை ஏற்படக் கூடும் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில், சட்டம்-ஒழுங்கை காப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பாகிஸ்தானுக்கு இந்திய விமானங்கள் புறப்பட்டது முதல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு திரும்பி வந்தது வரையிலான தகவல் அனைத்தும், பிரதமர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு பகிரப்பட்டன. அங்கு அதிகாலைப் பொழுதில் இந்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்தார். தாக்குதல் முடிந்த பின்னர், குடியரசுத்தலைவர், துணைக்குடியரசுத்தலைவர் ஆகியோருக்கு இதுகுறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP