மனித உரிமைகள் ஆணையம் என்பது என்ன? அதன் பணிகள் என்ன?

மனித உரிமைகள் ஆணையம் என்பது ஒரு அரசுடமை அமைப்பாகும். மனித உரிமைகளை பாதுகாக்கவும், அதனை மேம்படுத்துவதற்கும் இந்த அமைப்பு உதவுகிறது.
 | 

மனித உரிமைகள் ஆணையம்  என்பது என்ன? அதன் பணிகள் என்ன?

மனித உரிமைகள் ஆணையம் என்பது ஒரு அரசுடமை அமைப்பாகும். மனித உரிமைகளை பாதுகாக்கவும், அதனை மேம்படுத்துவதற்கும் இந்த அமைப்பு உதவுகிறது.  

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மைக்கேல் என்பவர் அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவு குறித்தும் ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களை வீட்டில் சிறை வைத்து இருப்பது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடந்த ஐக்கிய மனித உரிமைகள் குழு கூட்டத்தில் அவர் இதுகுறித்து பேசியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையம்

உலகெங்கிலுமுள்ள மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும்,மனித உரிமை மீறல்கள் ஏதேனும் நடந்தால் அதனை சரி செய்யவும், அவற்றுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

மனித உரிமைகள் ஆணையம் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. மனித உரிமைகள் ஆணையம் ஆண்டுக்கு மூன்று முறை கூட்டத்தை நடத்துகிறது. மார்ச் மாதத்தில் 4 வாரங்கள், ஜூன் மாதத்தில் மூன்று வாரங்கள், செப்டம்பர் மாதத்தில் மூன்று வாரங்கள் இந்தக் கூட்டம் நடைபெறும். சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் விருப்பப்படும் பட்சத்தில் சிறப்புக் கூட்டங்களையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஐ.நாவில் மொத்தம் 47 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

உலக நாடுகளில் உள்ள மக்களின் மனித உரிமைகளை காப்பதற்கு அந்தந்த நாடுகள் தங்களது தனிப்பட்ட கடமைகளையும் உறுதி மொழிகளையும் அளிக்கலாம்.

ஐ.நா சபையில் உள்ள நாடுகளின் விவரங்கள்:

ஆப்பிரிக்க நாடுகள்: 13 இடங்கள்
ஆசியா-பசிபிக் நாடுகள்: 13 இடங்கள்
லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள்: 8 இடங்கள்
மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்கள்: 7 இடங்கள்
கிழக்கு ஐரோப்பிய நாடுகள்: 6 இடங்கள்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள். தொடர்ச்சியாக இரண்டு முறை உறுப்பினராக இருந்தவர்கள் அடுத்த முறை தகுதி பெறமாட்டார்கள். 2019 ஜனவரி 1 நிலவரப்படி 114 நாடுகள் ஐ.நாவில் உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தானும் இந்தப் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு தலைவர் மற்றும் நான்கு துணை தலைவர்கள் இருப்பர். மொத்தம் ஐந்து குழுக்களை கொண்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP