பிரதமரான பிறகு மோடியின் முதல் கையெழுத்து எது தெரியுமா?

பதவியேற்ற பிறகு முதல் கையெழுத்தாக, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசாரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ்மோடி.
 | 

பிரதமரான பிறகு மோடியின் முதல் கையெழுத்து எது தெரியுமா?

பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் கையெழுத்தாக, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசாரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. 

2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று 2வது முறையாக  நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றார். தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழா, பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், நம் நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிக்கெட் மற்றும் திரையுலக முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். 

இதையடுத்து இன்று புதிய மத்திய அமைச்சர்களுடனான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். 

பிரதமரான பிறகு மோடியின் முதல் கையெழுத்து எது தெரியுமா?

தொடர்ந்து பிரதமர் மோடி இன்று மாலை தனது அலுவல் பணிகளை தொடங்கியுள்ளார். அவர், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி முதல் கையெழுத்து இட்டுள்ளார். 

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படையினரின் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.2250 லிருந்து ரூ.3,000 ஆகவும், ஆன் குழந்தைகளுக்கு ரூ.2000 லிருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்தி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, தீவிரவாத தாக்குதல்/ நக்சல் தாக்குதலில் உயிரிழந்த மாநில போலீசாரின் குழந்தைகளுக்கு ரூ.500 நிதியுதவி வழங்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கல்வி உதவித்தொகை தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. 

newstm.in

மக்களவையில் இடம்பெறும் மத்திய அமைச்சர்கள் & இணை அமைச்சர்கள் முழு பட்டியல்..

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP