குழந்தையை சமாதானப்படுத்த மன நலம் பாதித்தவர் செய்த பதறவைக்கும் காரியம்!

அழுது கொண்டிருந்த குழந்தையை தாயிடம் இருந்து பிடிங்கி ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசிய, நபரை அங்கிருந்த பயணிகள் பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 | 

கடந்த புதன் கிழமை மேற்கு வங்காளத்தை சேர்ந்த உமா பர்மன் என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் 7 மாத குழந்தையுடன்  டெல்லி-ஃபாரக்கா எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரின் குழந்தை தொடர்ந்து அழுத்த வண்ணம் இருந்துள்ளது .இந்நிலையில்  அவர்கள் பயணம் செய்த ரயில், அயோத்திய நோக்கி வந்து கொண்டிருந்த போது பயணிகளில் ஒருவர் குழந்தையை சமாதானப்படுத்துவது போல தாயிடம் இருந்த குழந்தையை தூக்கியுள்ளார். என்ன செய்ய போகிறார் என மற்ற பயணிகள் யூகிப்பதற்குள் அந்த நபர் ரயிலின் கதவருகே சென்று ஓடும் ரயிலிலிருந்து குழந்தையை வெளியில் தூக்கி வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அந்த நபரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் பீகார் சமஸ்திபூரைச் சேர்ந்த கமலேஷ் என்பதும் . அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தூக்கி வீசப்பட்ட 7 மாத குழந்தையை தேடி வருகின்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP