மோடியை தூங்க விட மாட்டோம்: ராகுல்

நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தூங்க விடமாட்டோம், என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 | 

மோடியை தூங்க விட மாட்டோம்: ராகுல்

நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தூங்க விடமாட்டோம், என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச முதல்வராக புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் கட்சியின் கமல்நாத், அம்மாநிலத்தில் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தனது முதல் உத்தரவை பிறப்பித்தார். இதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை வலியுறுத்தி வருகிறார். இது குறித்து பேசிய அவர், "விவசாய கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்ய, காங்கிரஸ் மற்றும் மற்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடுவோம். ஒரு இன்ச் கூட நகர மாட்டோம். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை மோடியை தூங்க விட மாட்டோம்" என்று கூறினார்.

மேலும் "இந்த நாட்டில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு ஒன்று சொல்கிறேன். இது உங்கள் நாடு. இது 15-20 தொழிலதிபர்களின் நாடு கிடையாது. உங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இராப்பகலாக உழைத்து நாட்டுக்கு உணவளிக்கும் உங்களின் குரலை கேட்க மறுக்கிறார்கள். உங்கள் குரலை நாங்கள் கொண்டு சேர்ப்போம். மூன்று மாநிலங்களில் அதை செய்து விட்டோம். நரேந்திர மோடி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவோம்" என்றும் கூறினார்

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP