இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்புக்கு தலைவணங்குகிறோம்: பிரதமர் மோடி

தாய் நாட்டிற்காக உழைக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 | 

இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்புக்கு தலைவணங்குகிறோம்: பிரதமர் மோடி

தாய் நாட்டிற்காக உழைக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தகல் தொடர்பு துண்டித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள  இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பாரத மாதாவின் கனவுகனை நிறைவேற்ற பலர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துள்ளனர். 

பல இரவுகளாக நீங்கள் தூங்கவில்லை என்று எனக்கு தெரியும். ஆனாலும் உங்களுடன் இன்று காலை மீண்டும் பேச விரும்பினேன். கடந்த சில மணி நேரங்களில் நமது விஞ்ஞானிகள் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தினார்கள். மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறிய நிலையில் திடீரென எல்லாமே மறைந்துவிட்டது. விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிப்பு பெரும் பின்னடைவு அல்ல. நமது முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும் அது ஆன்மாவை தோற்கடிக்காது. விஞ்ஞானிகளின் பின்னே நாட்டு மக்கள் துணைநிற்கின்றனர். 

இஸ்ரோ விடஞ்ஞானிகளால் நாடே பெருமை கொள்கிறது. தாய் நாட்டிற்காக உழைக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன்.
நமது விஞ்ஞானிகளின் உழைப்பையும் உறுதியையும் போற்றுகிறேன். அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது. இன்று விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளோம். விண்வெளி ஆய்வில் இன்னு புதிய உச்சத்தை தொடவுள்ளோம். கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமானதல்ல, நிலவைத் தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும்" என தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP