டாக்டர் அப்துல்கலாமின் அளப்பரிய செயல்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி

டாக்டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, இந்தியாவுக்காக அவர் ஆற்றிய செயல்களுக்கு, நாம் அனைவரும் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 | 

டாக்டர் அப்துல்கலாமின் அளப்பரிய செயல்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி

டாக்டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, இந்தியாவுக்காக அவர் ஆற்றிய செயல்களுக்கு, நாம் அனைவரும் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 88-வது பிறந்தநாளான இன்று (செவ்வாய்கிழமை), அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அவரை குறித்த சில கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

அவரது வாழ்க்கையை அவர் வாழ்ந்த விதம், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கான ஓர் நல்ல எடுத்துக்காட்டு எனவும், இந்தியாவின் ஏவுகனை மனிதராக விளங்கிய அவர், நமது நாட்டிற்காகவும், விண்வெளி ஆராய்ச்சிக்காகவும் ஆற்றிய செயல்கள் அளப்பறியன என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், 21 ஆம் நூற்றாண்டில், இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டாரோ, அவ்வகையில், அவரின் கனவை நினைவாக்கும் வெற்றி பாதையில் இந்தியா சென்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில், இந்திய மக்கள் அனைவரும் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாகவும் அவரது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், நமது முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல்கலாமிற்கு தன் நன்றியை தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ காட்சியையும் அப்பதிவுடன் இணைத்துள்ளார். 

கடந்த 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் 15 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்த, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் ஓர் முக்கிய ஆராய்ச்சியாளராகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முக்கிய நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற இவர், கடந்த 2015ஆம் ஆண்டு, ஜூலை 27ஆம் தேதியன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.
 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP