இறந்துவிட்டதாக வாட்ஸ் - அப்பில் வைரலான தகவல்... மெர்சலான மும்பைவாலா!

மும்பை புறநகரான தஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர துஷ்சஞ்ச். அவருக்கு வந்த ஒரு வாட்ஸ் -அப் தகவல், அவர் இறந்தேவிட்டதாக தெரிவித்தது.
 | 

இறந்துவிட்டதாக வாட்ஸ் - அப்பில் வைரலான தகவல்... மெர்சலான மும்பைவாலா!

மும்பை புறநகரான தஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர துஷ்சஞ்ச். 43 வயதான ஊடகவியலாளரான இவர் நேற்றிரவு தன் குடும்பத்துடன் மால்டாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவருக்கு வந்த ஒரு வாட்ஸ் -அப் தகவல், அவர் இறந்தேவிட்டதாக தெரிவித்தது. அச்செய்தியை படித்ததும் அதிர்ச்சியடைந்த துஷ்சஞ்ச், பின்னர் அதுகுறித்து ஆராயந்தபோது, தமக்கு நன்கு அறிமுகமான சிலரே இப்படி வேண்டுமென்றே வாட்ஸ்-அப் மூலம் வதந்தி பரப்பி வருகின்றனர் என தெரிந்துக் கொண்டார்.

இத்தகவல் சில நிமிடங்களிலேயே காட்டுத் தீ போல பரவவே, உற்றார், உறவினர், நண்பர்கள் என, 400-க்கும் மேற்பட்டோர் துஷ்சஞ்சின் மொபைல் எண்ணில் தொடர்ந்து தொடர்பு கொண்டு இந்த அதிர்ச்சிகரமான தகவல் பற்றி கேட்டறிந்த வண்ணம் இருந்தனர். 

அவர்களிடம் எல்லாம், தான் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறேன் என துஷ்சஞ்ச் மனஉளைச்சலுடன் பதிலளிக்க வேண்டியதானது. இதுகுறித்து  அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வதந்தி பரப்பியவர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP