ஹோட்டலாக மாறப்போகும் போர்க்கப்பல்!

இந்திய கப்பற்படையில் இருந்து விடுவிக்கப்பட்ட, முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான "ஐஎன்எஸ் விராட்"டை அருங்காட்சியகம் அல்லது உணவு விடுதியாக (ஹோட்டல்) மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 | 

கடந்த 1987-இல் இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் விராட், 30 ஆண்டுகள் சேவைக்கு பிறகு கடந்த ஆண்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, இப்போர் கப்பலை அருங்காட்சியகமாகவோ, ஹோட்டலாகவோ மாற்றுவதற்கு மகாராஷ்டிர மாநில அரசு, மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், "ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பலை அருங்காட்சியகம் அல்லது ஹோட்டலாக மாற்றலாம் என்ற மகாராஷ்டிர அரசின் யோசனைக்கு, கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP