ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு விஆர்எஸ்?

இந்திய ரயில்வே துறையில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் பேருக்கு விரைவில் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) தரப்பட உள்ளது; இதில் பெரும்பாலோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது என, சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
 | 

ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு விஆர்எஸ்?

இந்திய ரயில்வே துறையில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் பேருக்கு விரைவில் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்கப்பட உள்ளது; இதில் பெரும்பாலோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது என, சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இச்செய்தி முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றதென ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " பொதுமக்களின் நலன் கருதியும், நிர்வாகரீதியான காரணங்களுக்காகவும் அனைத்து பணியாளர்களின் பணித் திறன்களை மதிப்பீடு செய்யும்படி, ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் பணியாளர்களின் திறன் மதிப்பீடு செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

கடந்த ஆண்டும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, லட்சக்கணக்கான ரயில்வே பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட உள்ளது என்ற செய்தி முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது" என ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP