துணை ராணுவப் படை பாதுகாப்பு கோரும் விஷ்வ பாரதி பல்கலைகழகம்!!

சாந்திநிகேதனில் உள்ள விஷ்வ பாரதி பல்கலைகழகத்திற்கு, துணை ராணுவப் படைகளின் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் அப்பல்கலைகழகத்தின் துணை தலைவர் பித்யூத் சக்கரவர்த்தி.
 | 

மேற்கு வங்காள மாநிலம் சாந்திநிகேதனில் உள்ள விஷ்வ பாரதி பல்கலைகழகத்தில், இந்த ஆண்டின் மே மாதத்தில் விண்ணப்பங்களின் விலை அதிகரிப்பை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள், மாணவர்களின் போராட்டத்தை தடுக்கும் முயற்சியை மேற்கொள்வதை விடுத்து அமைதியை கடைபிடித்ததாக குற்றம் சாட்டிய அப்பல்கலைகழகத்தின் துணை தலைவர் பித்யூத் சக்கரவர்த்தி, வரும் காலங்களில் இத்தகைய போராட்டங்கள் நேராமல் இருக்க துணை ராணுவப் படைகளின் பாதுகாப்பு வேண்டுமென்று, மத்திய வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் தற்போது எந்த மத்திய பல்கலைகழகத்திலும் துணை ராணுவப் படைகளின் பாதுகாப்பு அமைக்கப்படாத நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, பனாரஸ் ஹிந்து பல்கலைகழகம் இதே போன்ற கோரிக்கையை முன் வைத்திருந்திருந்ததையடுத்து, மத்திய அமைச்சகம் இதுவரை அதன் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP